மாயா தேவி கோயில், அரித்துவார்

அரித்துவாரில் அமைந்துள்ள இந்துக் கோயில்

மாயா தேவி கோயில் (Maya Devi Temple) என்பது இந்தியாவின் உத்தராகாண்ட மாநிலத்தின் புனித நகரமான அரித்துவாரில் உள்ள மாயா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயமாகும். சதி தேவியின் இதயமும், தொப்புளும் இன்று கோயில் இருக்கும் பகுதியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. எனவே இது சில நேரங்களில் சக்தி பீடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.[1] [2]

மாயா தேவி கோயில்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Uttarakhand" does not exist.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்டம்
மாவட்டம்:அரித்துவார்
அமைவு:அரித்துவார்
ஆள்கூறுகள்:29°57′00″N 78°09′43″E / 29.95000°N 78.16194°E / 29.95000; 78.16194
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:தெரியவில்லை

மூன்று தலைகளையும், நான்கு கரங்களையும் கொண்ட தெய்வமான இது சக்தியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. அரித்துவார் முன்பு 'மாயாபுரி' என்று அழைக்கப்பட்டது. வேண்டுதல்கள் நிறைவேறும் வழிபாட்டுத் தலமாக விளங்கும் இக்கோயில் ஒரு சித்தர் பீடமாகும். அரித்துவாரில் அமைந்துள்ள மூன்று பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சண்டி தேவி கோயிலும், மானசா தேவி கோயிலும் மற்ற இரண்டு பீடங்களாகும்.[3]

விளக்கம்

தொகு

இக்கோயில் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அரித்துவாரில் உள்ள மூன்று பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று. அவை இன்ற���ம் அப்படியே உள்ளன. மற்ற இரண்டு நாராயண சிலைகளும், பைரவர் கோயிலும் இருக்கிறது. உட்புற சன்னதியில் மையத்தில் மாயா தேவியும், இடதுபுறத்தில் காளியும், வலதுபுறத்தில் காமாக்கியாவின் மூர்த்திகளும் உள்ளன. சக்தியின் வடிவங்களான மற்ற இரண்டு தேவிகளும் உள் சன்னதியில் உள்ளனர். ஹரனின் படித்துறை கிழக்கே அமைந்துள்ள இக்கோயிலை பேருந்துகள், ஆட்டோ ரிக்சாக்கள் மூலம் எளிதில் அடையலாம். அரித்துவாருக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக இது கருதப்படுகிறது.[4]

குறிப்பாக நவராத்திரியின் போதும், அரித்துவார் கும்பமேளாவின் போதும் இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

புகைப்படங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Mapsofindia.com. "Maya Devi Temple".
  2. "Devotion and harmony by the Ganga". தி இந்து. 2006-06-25. Archived from the original on 2008-03-18. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  3. Mustseeindia.com. "Maya Devi Temple, Haridwar". Archived from the original on 16 September 2008. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
  4. "Places to visit in and around Haridwar". Zeenews.com.