பெரம்பலூர்

பெரம்பலூர் (Perambalur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பெரம்பலூர் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

பெரம்பலூர்
பெரும்புலியூர்
பெரம்பலூர் பேருந்து நிலையம்
பெரம்பலூர் பேருந்து நிலையம்
பெரம்பலூர் is located in தமிழ் நாடு
பெரம்பலூர்
பெரம்பலூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
பெரம்பலூர் is located in இந்தியா
பெரம்பலூர்
பெரம்பலூர்
பெரம்பலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்பெரம்பலூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்பச்சமுத்து
 • சட்டமன்ற உறுப்பினர்எம். பிரபாகரன்
 • மாவட்ட ஆட்சியர்ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப.
ஏற்றம்
143 m (469 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்49,648
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
621 212
தொலைபேசி குறியீடு04328
வாகனப் பதிவுTN-46
சென்னையிலிருந்து தொலைவு277 கி.மீ (172 மைல்)
விழுப்புரத்திலிருந்து தொலைவு108 கி.மீ. (67 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு58 கி.மீ. (36 மைல்)
இணையதளம்perambalur

பெயர் விளக்கம்

தொகு
  • பெரும்புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.[1] பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் இளம்புல்லூர்க் காவிதி என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).
  • மேலும் இவ்வூரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அந்த பிரம்பு மரத்தில் இருந்து பல பொருள் சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இவ்வூருக்கு பிரம்பலூர் என்ற பெயர் காலபோக்கில் மாறி பெரம்பலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.[சான்று தேவை]

பெரம்பலூர் நகராட்சி பகுதி

தொகு

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை, சங்குபேட்டை, நான்கு ரோடு, துறை மங்கலம், புதிய பேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர், ஆர்.எம்.கே. நகர், மதனகோபாலபுரம் ஆகியவை அடங்கும்.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

தொகு
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
86.94%
முஸ்லிம்கள்
9.29%
கிறிஸ்தவர்கள்
3.6%
சீக்கியர்கள்
0.01%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
0.0%
மற்றவை
0.12%
சமயமில்லாதவர்கள்
0.03%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 49,648 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர்.[3]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, பெரம்பலூரில் இந்துக்கள் 86.94%, முஸ்லிம்கள் 9.29%, கிறிஸ்தவர்கள் 3.6%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.03% பேர்களும் உள்ளனர்.

போக்குவரத்து

தொகு

இந்நகரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 45 செல்கிறது. இங்கிருந்து சென்னைக்கு செல்லவும் திருச்சி செல்ல பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 136இன் வழியாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை 79இன் வழியாக சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற கொங்கு நகரங்களுக்கு செல்லலாம்.

பெரம்பலூரில் இரயில் நிலையம் இல்லை. ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, இரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்பணியை தொடங்கவில்லை. இங்கிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள அரியலூர் இரயில் நிலையமும் மற்றும் 58 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி இரயில் நிலையமும் முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு இரயில் நிலையங்களிலும் பல்லவன் தொடர்வண்டி, மலைக்கோட்டை விரைவுவண்டி, முத்து நகர் விரைவுவண்டி, வைகை விரைவுத் தொடர்வண்டி மற்றும் குருவாயூர் விரைவுவண்டி ஆகிய தொடர்வண்டிகள் நின்று செல்கிறது.

இங்கிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமும், 117 கி.மீ தொலைவில் உள்ள சேலம் வானூர்தி நிலையமும் அருகிலுள்ள வானூர்தி நிலையங்களாகும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்
மக்களவை உறுப்பினர் பச்சமுத்து

பெரம்பலூர் நகராட்சியானது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த (திமுக சின்னத்தில்) பச்சமுத்து வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எம். பிரபாகரன் வென்றார்.

ஆதாரங்கள்

தொகு
  1. கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127
  2. "Perambalur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  3. பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரம்பலூர்&oldid=4076276" இலிருந்து மீள்விக்கப்பட்டது