நந்தமூரி ஹரிகிருஷ்ணா

நந்தமூரி ஹரிகிருஷ்ணா (Nandamuri Harikrishna, 2 செப்டம்பர் 1956 – 29 ஆகத்து 2018) தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் ஆந்திரா முதல்வரும் நடிகருமான என். டி. ராமராவின் மகன் ஆவார்.[2]

நந்தமூரி ஹரிகிருஷ்ணா
Nandamuri Harikrishna
பிறப்பு(1956-09-02)2 செப்டம்பர் 1956
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(2018-08-29)29 ஆகத்து 2018 (aged 61)
நல்கொண்டா, தெலுங்கானா, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
வாகன விபத்து
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா
பணிஅரசியல்வாதி, நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1967–1970; 1974–2005
அரசியல் கட்சிதெலுங்கு தேசம்
பெற்றோர்என். டி. ராமராவ்
பசாவராமா
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி (1973
சாலினி
பிள்ளைகள்ஜானகி ராம்[1]
கல்யாண் ராம்<br /சுகாசினி
ஜூனியர் என்டிஆர்
உறவினர்கள்நந்தமூரி பாலகிருஷ்ணா (சகோதரர்)
நா. சந்திரபாபு

ஹரிகிருஷ்ணா 1964 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதல் படம் சிறீ கிருஷ்ணாவதாரம். இதில் இவர் கிருஷ்ணனாக நடித்தார்.[3] இவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான நந்தி விருது ஆந்திர அரசினால் வழங்கப்பட்டது. இவர் 1996-99 காலப்பகுதியில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். 1996 இல் சாலைப் போக்குவரத்து மாநில அமைச்சராகப் பணியாற்றினார். 2008-இல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.[2] இவர் 2018 ஆகத்து 29 இல் சாலை விபத்து ஒன்றில் தனது 61-வது அகவையில் உயிரிழந்தார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Janaki Ram Died in an car accident". Archived from the original on 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2018-09-01.
  2. 2.0 2.1 "Detailed Profile: Shri Nandamuri Harikrishna". india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2010-09-12.
  3. "Sri Krishnavataram (1967)". studboo.com. Archived from the original on 2018-08-29. பார்க்கப்பட்ட நாள் 2010-09-12.
  4. "Nandamuri Harikrishna, NTR’s Son And TDP Leader, Dies In Nalgonda Road Accident". Headlines Today இம் மூலத்தில் இருந்து 29 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180829130404/https://headlinestoday.org/national/2002/nandamuri-harikrishna-ntrs-son-and-tdp-leader-dies-in-nalgonda-road-accident/. பார்த்த நாள்: 29 August 2018. 
  5. "Nandamuri Harikrishna died in road accident - INDToday". indtoday.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தமூரி_ஹரிகிருஷ்ணா&oldid=3756500" இலிருந்து மீள்விக்கப்பட்டது