தேசிய இடைக்காலப் பேரவை

லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (National Transitional Council of Libya, அரபி: المجلس الوطني الإنتقالي, al-majlis al-waṭanī al-'intiqālī), சில நேரங்களில் இடைக்காலத் தேசியப் பேரவை (Transitional National Council),[2](Interim National Council),[3] அல்லது லிபிய தேசியப் பேரவை (Libyan National Council), 2011 லிபிய எழுச்சியைத் தொடர்ந்து கதாஃபிக்கு எதிரான இயக்கத்தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உருவாக்கம் 27 பெப்ரவரி 2011 அன்று பெங்காசியில் அறிவிக்கப்பட்டது. அப்போது இதன் நோக்கமாக " புரட்சியாளர்களின் அரசியல் இடைமுகமாக" அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 5, 2011 அன்று "தான் மட்டுமே லிபியா மற்றும் லிபிய மக்களை பிரதிநிதிப்படுத்தும் சட்டபூர்வ அமைப்பாக" அறிவித்தது.[4][5][6]

தேசிய இடைக்காலப் பேரவை (லிபியக் குடியரசு)
المجلس الوطني الانتقالي
al-majlis al-waṭanī al-intiqālī
கொடி of லிபியா
கொடி
Seal of லிபியா
Seal
குறிக்கோள்: சுதந்திரம், நீதி, மக்களாட்சி
நாட்டுப்பண்: லிபியா,லிபியா,லிபியா
  தே.இ.பே கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள்l     
  கதாஃபியின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள்
  சண்டை தொடர்கிறது
தலைநகரம்திரிப்பொலி[1]
ஆட்சி மொழி(கள்)லிபிய அராபி (de facto)
பெர்பேர் வழக்குமொழிகள்
நஃபூசி மொழி
மக்கள்லிபியன்
அரசாங்கம்காபந்து அரசு
• தலைவர்
முசுதஃபா அப்துல் ஜலீல்
• துணைத்தலைவர்
அப்துல் ஹஃபீஸ் கோகா
• பிரதம அமைச்சர்
[மகமூது ஜிப்ரில்
நிறுவுதல்
17 பெப்ரவரி 2011
• தேசியப் பேரவை நிறுவப்பட்டது
27 பெப்ரவரி 2011
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLY

மார்ச்சு 23,2011 அன்று இப்பேரவை மகமூது ஜிப்ரில் தலைமையில் ஓர் செயற்குழுவை அமைத்தது. லிபியாவில் ஓர் முறையான அரசமைபு ஏற்படும்வரை இப்பேரவையே சட்டபூர்வ அரசமைப்பாக பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவையிலும் லிபியாவின் இடத்தை பெற்றுள்ளது.[8] மேலும் பல நாடுகள் அலுவல்முறையல்லாத தொடர்புகளை தேசிய இடைக்காலப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன; அவற்றில் சில பேரவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நிரந்த தூதரகங்களை பெங்காசியில் ஏற்படுத்தி உள்ளன.

பன்னாட்டு உறவு

தொகு
 
  லிபியா
  லிபியாவின் சட்டபூர்வ அரசாக தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்றுக்கொண்ட நாடுகள்
  லிபியாவின் ஐ.நா இடத்தைப் பெற வாக்கெடுப்பு நடக்கும்வரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்
  தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்க மறுக்கும் நாடுகள்

சூலை 2011இல் பன்னாட்டு உறுப்ப��னர்கள் அடங்கிய லிபியா தொடர்புக் குழுவினர் "லிபியாவின் சட்டபூர்வ அரசமைப்பாக" தேசிய இடைக்காலப் பேரவையை அறிவித்தது.[9][10] அரபு நாடுகள் கூட்டமைப்பு [11] மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்.[12] அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. செப்டம்பர் 16, 2011 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை லிபியாவின் ஐக்கிய நாடுகள் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவைக்கு வழங்க வாக்களித்தது.[8]

லிபியாவின் அரசராக கருதப்படும் முகமது எல் செனுசி இப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. http://english.aljazeera.net/news/africa/2011/08/201182623316261938.html
  2. "The US recognises Libya's Transitional National Council". World Socialist Web Site. 20 July 2011. http://www.wsws.org/articles/2011/jul2011/pers-j20.shtml. பார்த்த நாள்: 29 July 2011. 
  3. "March 31st Updates | Libya February 17th". Archived from the original on 2011-04-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
  4. "Ferocious Battles in Libya as National Council Meets for First Time". NewsCore (via news.com.au). 6 March 2011 இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190822083631/https://www.news.com.au/world/ferocious-battles-in-libya-as-national-council-meets-for-first-time/news-story/77a9c3d6f7ffdb00ee111056a8447ac8. பார்த்த நாள்: 6 March 2011. 
  5. The Interim Transitional National Council Decree 3, published 5 March 2011
  6. "Founding Statement of the Interim Transitional National Council". National Transitional Council. 5 March 2011. Archived from the original on 7 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "Excerpts from Libya Contact Group Chair's Statement". Reuters. 15 July 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120725211340/http://af.reuters.com/article/commoditiesNews/idAFLDE76E0W120110715. பார்த்த நாள்: 25 July 2011. 
  8. 8.0 8.1 Lederer, Edith (16 September 2011). "UN approves Libya seat for former rebels". San Jose Mercury News இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111123034247/http://www.mercurynews.com/news/ci_18910663. பார்த்த நாள்: 16 September 2011. 
  9. "Excerpts from Libya Contact Group Chair's Statement". Reuters. 15 July 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120725211340/http://af.reuters.com/article/commoditiesNews/idAFLDE76E0W120110715. பார்த்த நாள்: 16 July 2011. 
  10. Black, Ian (15 July 2011). "Libyan Rebels Win International Recognition as Country's Leaders". தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2011/jul/15/libyan-rebels-international-recognition-leaders. பார்த்த நாள்: 16 July 2011. 
  11. "Libyan Regime 'Lost Legitimacy'—Arab League". Philippine Daily Inquirer. 13 March 2011. Archived from the original on 14 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Staff (11 May 2011). "Foreign Minister Radosław Sikorski Visits Benghazi". Polish Ministry of Foreign Affairs. http://www.msz.gov.pl/Foreign,Minister,Radoslaw,Sikorski,visits,Benghazi,43100.html. பார்த்த நாள்: 20 May 2011. 
  13. "Libya's 'Exiled Prince' Urges World Action". Khaleej Times. Archived from the original on 13 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 10 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

தொகு


ஊடகங்கள்
பிற குழுக்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_இடைக்காலப்_பேரவை&oldid=3637638" இலிருந்து மீள்விக்கப்பட்டது