திருவண்வண்டூர்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவண்வண்டூர் (Thiruvanvandoor Mahavishnu Temple) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் திருவண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.[2]

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவண்வண்டூர் மகாவிஷ்ணு திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:9°20′35″N 76°34′49″E / 9.343115°N 76.580310°E / 9.343115; 76.580310
பெயர்
புராண பெயர்(கள்):திருவண்வண்டூர்
பெயர்:திருவண்வண்டூர் மகாவிஷ்ணு திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவண்வண்டூர்
மாவட்டம்:ஆலப்புழா
மாநிலம்:கேரளம்
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாம்பணையப்பன் (திருமால்)
உற்சவர்:கோசாலா கிருஷ்ணா (திருமால்)
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
கருவறைக்கு மேல் கோபுரத்தின் படம்

இறைவன், இறைவி

தொகு

இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாம்பனையப்பன், கமலநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் பம்பை தீர்த்தம். விமானம் வேதாலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

சிறப்புகள்

தொகு

மகாபாரதத்தின் படி பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது. நம்மாழ்வார் 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
  2. 2.0 2.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்வண்டூர்&oldid=3825139" இலிருந்து மீள்விக்கப்பட்டது