தஞ்சாவூர் மாநகராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியாகும். மாநிலத்தின் 12-வது மாநகராட்சியாக 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 54 கோடி ரூபாய் ஆகும்.[1][2]

தஞ்சாவூர் மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்புஏப்ரல் 10, 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-04-10)
தலைமை
மேயர்
சண். இராமநாதன், திமுக
4 மார்ச் 2022 முதல்
துணை மேயர்
அஞ்சுகம் பூபதி, திமுக
4 மார்ச் 2022 முதல்
மாநகராட்சி ஆணையாளர்
கே. சரவணக்குமார்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்51
அரசியல் குழுக்கள்
ஆளும் கட்சியினர் (39)
  • மதச்சார்பற்ற முன்னேற்றக் கூட்டணி (39)

எதிர் கட்சியினர் (9)

மற்றவர்கள் (3)

வலைத்தளம்
www.tnurbantree.tn.gov.in/thanjavur
thanjavurcorporation.org

வரலாறு

தொகு

தஞ்சாவூர் நகராட்சி

தொகு

தஞ்சாவூர் நகராட்சி மன்றம் கி.பி.1866 மே 9-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை ஆங்கிலேயர் உருவாக்கினர்.கி.பி.1983-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது.

மாநகராட்சியாக தரம் உயர்வு

தொகு

தஞ்சா��ூர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த நிலையில், மாநிலத்தின் 12–வது மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தரம் உயர்த்தப்பட்டது[1][3][4]

மாநகராட்சி

தொகு
தற்பொழுதய தஞ்சாவூர் மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்[5]
ஆணையர் மேயர் துணைமேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
சரவணக்குமார் சண். இராமநாதன் அஞ்சுகம் பூபதி 51

மாநகராட்சி தேர்தல், 2022

தொகு

2022-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் 51 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 39 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், பாஜக 1 வார்டையும், அமமுக 1 வார்டையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் திமுகவின் சண். இராமநாதனும், அஞ்சுகம் பூபதியும் வென்றனர்.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Thanjavur and Dindigul to be upgraded as City Municipal Corporations". Chennaionline.com. Archived from the original on 15 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. MUNICIPAL CORPORATION THANJAVUR
  3. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=53235[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-04.
  5. "தஞ்சை மாநகராட்சி மேயர், துணைமேயர் மறைமுகத்தேர்தலில் திமுகவினர் தேர்வு" (in தமிழ்). தினமலர் (தஞ்சாவூர்: ஆர்.ஆர். கோபால்ஜி) 71 (180): p. 9. 05.03.2022. 
  6. தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் வார்டுகள் & வெற்றியாளர்கள் பட்டியல் 2022

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_மாநகராட்சி&oldid=3930612" இலிருந்து மீள்விக்கப்பட்டது