சென்னை வர்த்தக மையம்
சென்னை வர்த்தக மையம் (Chennai Trade Centre) சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிரந்தர பொருட்காட்சி கூடம் ஆகும். இங்கு ஆண்டு முழுவதும் அவ்வப்போது வணிகச்சந்தைகள், பொருட்காட்சிகள் நடந்து வருகிறது.
சென்னை வர்த்தக மையம் | |
---|---|
சென்னை வர்த்தக மையத்தின் கழுப் பார்வை | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கண்காட்சி மையம் மற்றும் அரங்கம் |
இடம் | நந்தம்பாக்கம், சென்னை, இந்தியா |
ஆள்கூற்று | 13°00′53″N 80°11′27″E / 13.0148°N 80.1909°E |
கட்டுமான ஆரம்பம் | 2000 |
நிறைவுற்றது | 2001 |
துவக்கம் | 2001 |
செலவு | ₹ 300 மில்லியன் |
உரிமையாளர் | தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 8,348 m2 (90,000 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சி. ஆர். நாராயண் ராவ் |
அமைவிடம்
தொகுசென்னை வர்த்தகமையம் சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் நந்தம்பாக்கத்தில் பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் கிண்டி மற்றும் பரங்கிமலை ஆகியனவாகும்.
வசதிகள்
தொகுவர்த்தக மையம் 6,714சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 1,900சதுர மீட்டர் அளவில் பல்நோக்கு மண்டபம், 500சதுர மீட்டர் அளவில் மேடை, 750மீட்டர் அளவில் விருந்து மண்டபம், 269சதுர மீட்டர் அளவில் ஓய்வு அறை, மற்றும் வணிக மற்றும் சந்திப்பு அறைகளுடன் அமைந்துள்ளது. பல்நோக்கு மண்டபத்தில் சுமார் 1,500 பேர் தங்கலாம். நுழைவாயிலில் உள்ள திறந்த இடம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தாழ்வாரத்துடன் சுமார் 800சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. விருந்தினர் ஓய்வறைகள்/ஓய்வு அறைகள் மற்றும் மேடை கலைஞர்களுக்கான பசுமை அறைகளும் உள்ளன.
மாநாட்டு மையத்தில் உள்ள சிறப்பு வசதிகள் நெகிழ் பகிர்வு, அகச்சிவப்பு எண்ணிம விளக்க அமைப்புகள், திரையரங்கு விளக்கு அமைப்பு, தெளிப்பான்கள் மற்றும் புகை கண்டறியும் கருவிகளுடன் கூடிய தீ பாதுகாப்பு, நவீன ஓலி மற்றும் காணொலி அமைப்பு, சந்திப்பு அறைகள், விருந்து மண்டபம், நெறிமுறை மற்றும் சிறப்பு விருந்தினர் அறை, வணிக மையம் முதலிய வசதிகளைக் கொண்டது. தகவல் சாவடி, வாகன நிறுத்த வசதி சைக்ளோரமா திரையுடன் கூடிய பல திரை பின்னணிகள் மற்றும் 1+5 மொழிகளுக்கான பல விளக்க வசதி, காணொலி காட்சிக் வசதி, மேடை விளக்குகளுக்கான ஒருங்கிணைந்த தொலைக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட ��சதிகளுடன் கூடியது.
விரிவாக்கத் திட்டம்
தொகுசென்னை வர்த்தக மையத்தை விரிவாக்கம் செய்வதற்காக இந்திய வர்த்தக மேம்பாட்டு கழகம் கூடுதலாக 10 ஏக்கர் நிலத்தை தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ளது. மேலும் இரண்டு அரங்குகளுடன் சுமார் 10,000சதுர மீட்டர் பரப்பினைச் சேர்த்து ₹ 1000 மில்லியன் செலவில் கண்காட்சி பகுதியை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.[1][2]
முன்னாள் துணை முதல்வரும் இன்றை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 26 பிப்ரவரி 2011 அன்று ₹ 2500 மில்லியன் செலவில் சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்தார். விரிவாக்கப் பணிகள் சூலை 2011-இல் தொடங்கி மார்ச் 2013-இல் நிறைவடைந்தது. இதில் ஆறு குளிரூட்டப்பட்ட கண்காட்சி அரங்குகள் கட்டப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 66,000 சதுர அடியில், இரண்டு தளங்களிலும் 2,000 வாகனங்கள் மற்றும் சம எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் திறன் கொண்ட 74,000 சதுர அடியில் அடித்தள வாகன நிறுத்தும் இட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.[3] தாமேசெக் இன்ஜினியரிங் கன்சோர்டியம் விரிவாக்கப் பணிகளுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டது.[4]
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு மையத்தின் திறனை ₹ 2890 மில்லியன் முதல் 40,000 சதுர மீட்டர் செலவில் இரட்டிப்பாக்கும் பணியில் ஈடுபட்டது. விரிவாக்கத்தில் கூடுதலாக 9.5 ஏக்கர் நிலம் சேர்க்கப்பட்டது. இதில் 4,000 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 1,000 கார்கள் நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bangalore to get Rs 100 crore expo centre | ITPO | | Indian Express". The New Indian Express. http://newindianexpress.com/cities/bangalore/article279706.ece.
- ↑ "Expansion of Chennai Trade Centre: bid to clear hurdles". The Hindu (Chennai). 2 February 2012. http://www.thehindu.com/news/cities/chennai/article2851708.ece.
- ↑ "Chennai Trade Centre to be expanded". The Hindu (Chennai). 26 February 2011. http://www.thehindu.com/news/cities/Chennai/article1492429.ece.
- ↑ "Stalin launches expansion work of Chennai Trade Centre". MSN News. 26 February 2011 இம் மூலத்தில் இருந்து 14 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714130040/http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4969648.
- ↑ Govardan, D. (9 January 2020). "Chennai Trade Centre to double in space at Rs 300 crore". The Times of India (Chennai: The Times Group). https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-trade-centre-to-double-in-space-at-rs-300cr/articleshow/73163910.cms.