கூனாக் மாவட்டம்
கூனாக் மாவட்டம்; (மலாய்: Daerah Kunak; ஆங்கிலம்: Kunak District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கூனாக் மாவட்டத்தின் தலைநகரம் கூனாக் நகரம் (Kunak Town).[1]
கூனாக் மாவட்டம் Kunak District Daerah Kunak | |
---|---|
ஆள்கூறுகள்: 4°41′00″N 118°15′00″E / 4.68333°N 118.25000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | தாவாவ் |
தலைநகரம் | கூனாக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,139 km2 (440 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 68,893 |
• அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
அஞ்சல் குறியீடு | 91XXX |
வாகனப் பதிவெண்கள் | SD |
இணையதளம் | ww2 ww2 |
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,846 கிலோமீட்டர்கள் (1,147 mi) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து 483 கிலோமீட்டர்கள் (300 mi)) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்ட��� மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கூனாக் மாநிலத்தில் 68,893 மக்கள் வசிக்கின்றனர்.[2]
பொது
தொகுசபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- கலாபாக்கான் மாவட்டம் (Kalabakan District)
- கூனாக் மாவட்டம் (Kunak District)
- லகாட் டத்து மாவட்டம் (Lahad Datu District)
- செம்பூர்ணா மாவட்டம் (Semporna District)
- தாவாவ் மாவட்டம் (Tawau District)
மக்கள் தொகையியல்
தொகு2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூனாக் மாவட்டத்தின் மக்கள் தொகை 68,893 ஆகும். பெரும்பான்மையோர் பஜாவு (Bajau); மற்றும் பூகிஸ் இனக் குழுவினர். இவர்களுக்கு அடுத்து ஓராங் சுங்கை (Orang Sungei) இன மக்களும் அதிகமாக உள்ளனர்.
கணிசமான அளவில் சீன சிறுபான்மையினரும் உள்ளனர். கூனாக் நகரத்தில் கடை வணிகம் செய்கின்றனர். அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் எண்ணெய்ப் பனை மரங்களை (Oil Palms) நடுவதிலும் ஈடுபட்டு உள்ளனர்.
அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் உள்ளனர்.
காட்சியகம்
தொகு-
கூனாக்கில் பழைய கடை.
-
கூனாக்கில் பாமாயில் சேமிப்பு கொள்கலன்கள்.
-
கூனாக்கில் சூரிய மறைவு
-
கூனாக் படகுத் துறை
-
கூனாக் சாலை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kunak is situated in the East coast of Sabah and is under the Tawau Division. The population there in Kunak has a majority of the Bajau and Bugis communities. The agriculture industry in Kunak is the main source of income for the people there". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
- ↑ "The population development of Kunak as well as related information; Kunak (District, Malaysia) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kunak District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kunak District Council
- Kunak District Office
மேலும் படிக்க
தொகு- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
- Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.