அண்டார்டிகாவின் மக்கள்தொகையியல்
அண்டார்டிகாவின் மக்கள்தொகையியல் (Demographics of Antarctica) அண்டார்டிகாவில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லையென்பதால் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கள முகாம்களைக் கொண்டதாகவே அமைகிறது. பருவகால முகாம்கள், ஆண்டு முழுவதும் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள், திமிங்கல வேட்டைக்காக வந்தவர்களின் குடியிருப்புகள் போன்றவை அண்டார்டிகாவின் மக்கள்தொகையியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.[1] அண்டார்டிக் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஏறக்குறைய 12 நாடுகள் அண்டார்ட்டிகா கண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல்களில் பருவகால அல்லது ஆண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்ய பணியாளர்களை அனுப்புகின்றன.
கண்டம் மற்றும் 60 பாகை தெற்கு அட்சரேகைக்கு தெற்கே அண்டார்டிக் உடன்படிக்கைக்கு உட்பட்ட தீவுகளில் அறிவியல் ஆராய்ச்சியை ஆதரிக்கும் மக்களின் எண்ணிக்கை கோடையில் சுமார் 4,000 ஆகவும் குளிர்காலத்தில் 1,000 பேராகவும் மாறுபடுகிறது. இதைத்தவிர கூடுதலாக கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பலில் வந்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் உட்பட தோராயமாக 1,000 பணியாளர்கள் ஒப்பந்த பிராந்தியத்தின் நீரில் உள்ளனர். மிகப்பெரிய இரயில் நிலையமான மெக்முர்டோ நிலையத்தில் கோடைகால மக்கள்தொகை சுமார் 1,000 பேராகவும் குளிர்கால மக்கள்தொகை சுமார் 200 பேராகவும் இருக்கிறது.[2]
அண்டார்டிகாவில் குறைந்தது 11 குழந்தைகள் பிறந்துள்ளன.[3] முதலாவது குழந்தையான எமிலியோ மார்கோசு பால்மா 1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று அர்கெந்தினாவின் பெற்றோருக்குப் பிறந்தார். அண்டார்டிக் தீபகற்பத்தின் முனையில் உள்ள ஓப் பே எனப்படும் எசுபெரான்சாவில் இப்பிறப்பு நிகழ்ந்தது. அண்டார்டிக் கண்டத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையான மரிசா டி லாசு நீவ்சு டெல்கடோ 1978 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார். இந்நிகழ்வும் எசுபெரான்சாவில் போர்டின் சார்சென்டோ கப்ரல் என்ற அர்கெந்தினா இராணுவத்தின் தளத்தில் நிகழ்ந்தது. கடைசியாக இங்கு 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லுக்மான் அலி சைட் என்பவர் பிறந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- Antarctica at the CIA World Factbook (includes section on the population of Antarctica).