சங்கரி
சங்கரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இதர அம்சங்கள்
ஆரோகணம்: | ஸ க3 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப க3 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ஆரோகண அவரோகணத்தில் ரி, ம, த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996