சுரிலி கோயல்
சுரிலி கோயல், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளராவார்.
சுரிலி கோயல் | |
---|---|
2012 ஆம் ஆண்டில் சுரிலி கோயல் | |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனை கல்வி நிறுவனம், லாஸ் ஏஞ்சலஸ் |
பணி | ஒய்யார ஆடை வடிவமைப்பாளர் |
19 ஜூன் 1977 ஆம் ஆண்டு, மும்பையில் துருவேந்த்ரா பிரகாஷ் கோயல் என்ற தொழிலதிபருக்கு பிறந்த சுரிலி, ஒய்யார ஆடை வடிவமைப்பு படிப்பினை இளங்கலையில் கற்றுள்ளார்,பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனை கல்வி நிலையத்தில் சென்று வடிவமைப்பு நுணுக்கங்களைக் கற்று தேறியுள்ளார். 2003 ஆம் ஆண்டு நவம்பரில், சுரிலி தனது சொந்த ஆடை வடிவமைப்பு வரிசையை 'சுரிலி ஜி' என்ற பெயரில் தொடங்கியுள்ளார். இந்த பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆடைகளின் சேகரிப்பை இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பு கடைகளான 'என்ஸெம்பிள்' இல் காட்சிப்படுத்தியுள்ளார். யாஷ் ராஜ் திரைப்பட நிறுவனம் தயாரித்த சலாம் நமஸ்தே (2005) என்ற திரைப்படத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்காக புதுமையாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன், சுரிலி இந்தித் திரைப்பட உலகில் தனது முத்திரையை பதித்துள்ளார்.
ஆம் ஆண்டில் விளம்பர நடிகர், நடிகைகளுக்காக ஒய்யார ஆடைகளை வடிவமைத்து, லக்மே ஒய்யார வாரக்கொண்டாடட்டம் என்பதில் ரோஸஸ் ஃபார் எவர் என்ற பெயரில் பிரபல இந்தி நடிகர்களான,சல்மான் கான், மலைகா அரோரா கான் மற்றும் முன்னாள் நடிகை நீலம் போன்றோருக்கு அணிவித்து இந்திய விளம்பர உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.[1]
பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவிடமும் சுரிலி பயிற்சி பெற்றுள்ளார்,[2]
ஜான்-இ-மன் (2006) என்ற திரைப்படத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்காக மீண்டும் ஒருமுறை ஆடை வடிவமைத்துள்ளார். மேலும் புகழ்பெற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் சாவரியா (2007) படத்திற்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
திரைப்படவியல்
தொகு- சலாம் நமஸ்தே (2005)
- ஜான்-இ-மன் (2006)
- தா ரா ரம் பம் (2007)
- தி லாஸ்ட் லியர் (2007)
- சாவரியா (2007)
- நீலம் (2009)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2006-10-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Gossip". Archived from the original on December 29, 2006. பார்க்கப்பட்ட நாள் October 6, 2006.