பரணர், சங்ககாலம்

Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:54, 2 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3198469 by Almighty34 (talk) உடையது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பரணர் என்னும் பெயர் கொண்ட பல புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்து வெவ்வேறு வகையான பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களில் சங்ககாலப் பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவர் தாம் பாடிய அகப்பொருள் பாடல்களிலும் அவர் காலத்தனவும், அவரது காலத்துக்கு முன்னர் நிகழ்ந்து தாம் அறிந்தனவுமாகிய பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவர் வரலாற்றுப் புலவர் எனப் போற்றப்படுகிறார்.

இவர் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளைப் புலவர் கால மன்னர் என்னும் தொகுப்பில் மேற்கோள் குறிப்புகளுடன் அறியலாம்.

பரணர் பாடல்கள்

தொகு

மொத்தம் 85. அவை:

பரணர் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்

தொகு

எழுமுடி மார்பின் எய்திய சேரல், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் பெருஞ்சேரலாதன், குட்டுவன், குட்டுவன் சேரல், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெரும்பூண் பொறையன், பொறையன், மாந்தரன் பொறையன் கடுங்கோ,

கரிகாலன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, (சோழன் மணக்கிள்ளி), சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி, தித்தன்,

செழியன், பசும்பூட் பாண்டியன்,

மன்னர் முதலானோர்

தொகு

அழிசி, சேந்தன், அகுதை, அஞ்சி, அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, ஆட்டனத்தி, ஆய், ஆய் எயினன், ஆரியப் பொருநன், (ஆரிய அண்ணல்), எயினன், எவ்வி, ஐயை, ஓரி, கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், திதியன், தித்தன் வெளியன், நள்ளி, நல்லடி, நன்னன், நன்னன் ஆய், நன்னன் உதியன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், பேகன், மத்தி, மருதி, மலையன், மிஞிலி, மோகூர்(மன்னன்), வல்லங்கிழான் நல்லடி, விச்சியர் பெருமகன்,விரான், வெளியன் வேண்மான், (கண்ணகி, கடவுள் பத்தினி), கண்ணகி(பேகன் மனைவி), அன்னி மிஞிலி,

மக்கள்

தொகு

வேண்முது மக்கள், ஆரியர், கொங்கர், கோசர், பூழிய��், வேளிர், வேண்மகளிர்,

இதனையும் காண்க

தொகு

கருவிநூல்

தொகு
  • பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிய சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூலில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணர்,_சங்ககாலம்&oldid=3729200" இலிருந்து மீள்விக்கப்பட்டது